மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு
தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சுசார் மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23-05) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் […]