உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

உள்ளூர்

தமிழ் தேசிய பேரவைக்கு மக்கள் வாக்களிக்கவேண்டுமென மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் வேண்டுகோள்

  • April 28, 2025
  • 0 Comments

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் அழிக்கப்பட்ட தீர்ப்புக்கு மதிப்பளித்து தனது போக்கை மாற்றி தானாக முன்வந்து தமிழ்தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்கு செயலாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. தமிழ்தேசிய பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகளும் அதன் […]

உள்ளூர்

கத்தோலிக்கர்களின் ஆன்மீக தலைவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்!

  • April 20, 2025
  • 0 Comments

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க கூறியுள்ளார். இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி […]

இந்தியா முக்கிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்!

  • April 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு […]

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாரிகள் யாரென அனுர அறிவிப்பாரா? முஜிபுர் ரஹ்மான் எம்.பி

  • April 20, 2025
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் […]

உள்ளூர்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு நேற்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

அனுராதபுரத்தில் முஸ்லீம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு கொலையா தற்கொலையா?

  • April 7, 2025
  • 0 Comments

அனுராதபுரம் கெகிராவ பகுதியில் இளம் முஸ்லீம் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். ஆனால் இவ்வாறு தூக்கிட்டு இறக்க வாய்ப்பே இல்லை எனவும் நீதியான விசரனை வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் பொலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்  

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • April 7, 2025
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]