உலகம் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இரண்டு வயோதிப பெண்கள் வெட்டிக்கொலை 15 வயது மாணவி காயம்

  • March 14, 2025
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண் மற்றும் அவரது 74 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களில் ஒருவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செல்வம் அடைக்கலநான் எம்பியின் புதிய கண்டுபிடிப்பு.

  • March 6, 2025
  • 0 Comments

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் […]

உலகம் முக்கிய செய்திகள்

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

  • March 6, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • March 2, 2025
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானி நிறுவனத்தின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக தருமாறு அரசாங்கம் கோரிக்கை

  • March 1, 2025
  • 0 Comments

மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் நீதிமன்றங்களில் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; உள்ளது- நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு

  • March 1, 2025
  • 0 Comments

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாரென : ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • March 1, 2025
  • 0 Comments

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் […]

உலகம்

உக்ரைனுக்கு செய்த ஆயூத உதவிக்கு பதிலாக அமெரிக்காவுக்கு கனிமவளத்தை தாரை வளர்க்கின்றார் ஜெலன்ஸ்கி

  • February 27, 2025
  • 0 Comments

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய ஜனாதிபதி; புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் இனி பயமின்றி சூதாடலாம்

  • February 25, 2025
  • 0 Comments

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தலுக்கு அதிகாரசபையை நிறுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும் முழுமையானதுமான விடயதானத்துடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக, சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவுவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு […]

இந்தியா

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது

  • February 25, 2025
  • 0 Comments

வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் […]