இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • February 8, 2025
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

உலகம்

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

  • February 7, 2025
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் […]

உலகம் முக்கிய செய்திகள்

டீப்சீக் ஏஐ-க்கு இந்தியா மற்றும் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது

  • February 7, 2025
  • 0 Comments

உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது. ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் அடைகின்றன. குறிப்பாக டீப்சீக் ஏஐ குறித்து அச்சம் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்க பாராளுமன்ற ஊழியர்கள் […]

அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளனர்

  • February 5, 2025
  • 0 Comments

அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம் ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும்போது அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. கம்பஹாவில் அது இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கம்புறுப்பிட்டியவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது அங்கும் அடக்குமுறை இடம்பெற்றுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச நாணய […]

முக்கிய செய்திகள்

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளுக்கு மாறாக, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்- வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாஸ

  • February 4, 2025
  • 0 Comments

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்துவந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூருவது அவசியமாகிறது. சுதந்திரம் பெற்ற தருணத்தில், நாம் ஒரு நாடாக வறுமை, நோய்கள் […]

உலகம்

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம்- டொனால்டு டிரம்ப்

  • February 4, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. […]

உலகம்

சிரியாவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி

  • February 4, 2025
  • 0 Comments

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பொய்யுரைப்பதால் இந்தியாவுக்கு வெளிநாட்டில் மரியாதை குறையும்- ஜெய்சங்கர்

  • February 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் நேற்று (03-02-2025) கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் அப்போது அவர், ‘இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், […]

உலகம் முக்கிய செய்திகள்

ஐரோப்ப நாடான கிரீசில் 72 மணித்தியாலங்களில் 200 முறை நிலநடுக்கம்

  • February 4, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.