கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் அரச கட்சி தோல்வி
பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது இதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தோல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை […]