மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர் பதவி உயர்வு பெற்றுள்ளார்
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (15-03) திருகோணமலையில் இடம் பெற்றது. குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11-03) வழங்கப்பட்டிருந்தது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
