உலகம்

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை கவலைக்கிடம் என வத்திகான் அறிவிப்பு

  • February 23, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசரின் பிரான்சிஸ் ஆண்டகையின் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வரி ஏய்ப்பு செய்த குற்றவாளி அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் விடுதலை

  • February 22, 2025
  • 0 Comments

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

  • February 21, 2025
  • 0 Comments

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் […]

உலகம்

போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக வட்டிகான் அறிவித்துள்ளது

  • February 21, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதுடைய போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து […]

முக்கிய செய்திகள்

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • February 20, 2025
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

  • February 20, 2025
  • 0 Comments

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாகப் பாகங்கள் கலக்கப்பட்டவையாகக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

  • February 20, 2025
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளி தப்ப உதவிய சாரதி கைது

  • February 20, 2025
  • 0 Comments

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் வேன் சாரதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான வேன் சாரதி புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னார் கடல் பரப்புக்குள் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • February 20, 2025
  • 0 Comments

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ தப்புவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்

  • February 19, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதேவேளைஇ பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான […]