பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்து என எவ்வாறு கூற முடியும்? என்ற கேள்விக்கு பதிலளிக்காத- அமைச்சர்
திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்ததாகக்கூறப்படும் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதி அமைச்சர் பதில் அளிக்காமல் பின்வாங்கினார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத்தெரிவித்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ இன்று முற்பகல் […]