உலகம்

சீனாவின் சரக்கு கப்பல் ரஸ்சியாவில் கரை ஒதுங்கியுள்ளது

  • February 12, 2025
  • 0 Comments

ரஸ்சியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஸ்சியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டொன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன. சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த […]

உலகம்

சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் டிரம்ப் இன் நடவடிக்கைகளுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

  • February 12, 2025
  • 0 Comments

மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – உதய கம்மன்பில

  • February 11, 2025
  • 0 Comments

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும். சட்டமா அதிபரை அச்சுறுத்தி சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்த வேண்டாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (10-02-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நாமல் ராஜபக்ஸ வேண்டுகோள்

  • February 10, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை சட்டத்துறை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று (09-02-2025) ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை மாவட்டத்தில் கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றல்

  • February 8, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் நேற்று (07-02-2025) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, சிறு பொதியில் இருந்த ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • February 8, 2025
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

  • February 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், ‘ அரச நியமனத்தினை உறுதிப்படுத்து’, ‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே’, ‘அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்’ போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் […]

முக்கிய செய்திகள்

இன்டர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மூவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டவரப்பட்டுள்ளனர்

  • February 7, 2025
  • 0 Comments

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களின் விபரங்களும் குற்றச் செயல்களும் பின்வருமாறு ; 01. 42 வயதுடைய ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா ; […]

உலகம்

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

  • February 7, 2025
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் […]