முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • January 23, 2025
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • January 23, 2025
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

முக்கிய செய்திகள்

திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்

  • January 21, 2025
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள் வீழ்ந்துள்ள அதே வேளை அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இனறு; (21) இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்  

முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த தடார் அடி அடித்துள்ளார்

  • January 21, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார் நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை […]

முக்கிய செய்திகள்

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை அமர்களப்படுத்தினார் ஹரினி

  • January 21, 2025
  • 0 Comments

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வினை கொழும்பில் ஏற்பாடு செய்தது இதன் தொடக்க நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விழா நிகழ்வில் முன்வைத்திருந்தார் அத்துடன் புத்தாண்டு […]

முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் அரச கட்சி தோல்வி

  • January 21, 2025
  • 0 Comments

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது இதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தோல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • January 20, 2025
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]

உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது […]

முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

  • January 19, 2025
  • 0 Comments

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் […]

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • January 19, 2025
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]