இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!
இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், […]