உள்ளூர்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு!

  • December 9, 2024
  • 0 Comments

வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை 10 ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்தில் அகற்றப்படாது விட்டால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் […]

உள்ளூர்

வடக்கில் இந்தியாவும் சீனாவும் முதலீட்டில் போட்டி?

  • December 4, 2024
  • 0 Comments

இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் […]

உள்ளூர்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • December 3, 2024
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

  • December 3, 2024
  • 0 Comments

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. […]

உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • December 2, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர்

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

  • December 2, 2024
  • 0 Comments

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இருதரப்பும் விரும்புகின்றது- முஜிபுர் ரஹ்மான் சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.facebook.com/share/p/19Ug2nWjc5/ […]

உள்ளூர்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • December 2, 2024
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

இந்தியா

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • December 2, 2024
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

உலகம்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த தயார்- ஜெலன்ஸ்கி

  • November 30, 2024
  • 0 Comments

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கின்றது சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தியது மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • November 30, 2024
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.