உள்ளூர்

தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

  • May 2, 2025
  • 0 Comments

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான […]

உள்ளூர்

ஆனந்தசங்கரியின் மகன் கரி ஆனந்தசங்கரி கனடா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

  • April 29, 2025
  • 0 Comments

கனடா தேர்தல் – வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது- 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

உள்ளூர்

தமிழ் தேசிய பேரவைக்கு மக்கள் வாக்களிக்கவேண்டுமென மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் வேண்டுகோள்

  • April 28, 2025
  • 0 Comments

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் அழிக்கப்பட்ட தீர்ப்புக்கு மதிப்பளித்து தனது போக்கை மாற்றி தானாக முன்வந்து தமிழ்தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்கு செயலாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. தமிழ்தேசிய பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகளும் அதன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • April 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் குழு நியமனம்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதான குழுவின் கீழ் மேலும் பல குழுக்களை உருவாக்கியுள்ளோம் பிரதான குழு ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்கனவே ஆராய […]

உள்ளூர்

ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்டனர்

  • April 21, 2025
  • 0 Comments

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர். ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர். பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்க பொருத்தமற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வனவள அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்- சத்தியலிங்கம் எம்பி

  • April 21, 2025
  • 0 Comments

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல்காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது ஒரு எல்லைப்புற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த காலத்து தாதா மேர்வின் சில்வா மீண்டும் சிறைவாசம்

  • April 21, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரும் இன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிள்ளையானுடன் பிணக்கால் சிறையில் இருக்கும் தாயாரை விடுவிக்குமாறு மகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

  • April 21, 2025
  • 0 Comments

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வ மக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட […]