உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

  • April 20, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்! https://www.youtube.com/@pathivunews/videos

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்!

  • April 20, 2025
  • 0 Comments

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க கூறியுள்ளார். இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி […]

இந்தியா முக்கிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்!

  • April 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு […]

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாரிகள் யாரென அனுர அறிவிப்பாரா? முஜிபுர் ரஹ்மான் எம்.பி

  • April 20, 2025
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

  • April 17, 2025
  • 0 Comments

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் ரி 56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

  • April 16, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

உள்ளூர்

ஜனாதிபதியின் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

  • April 14, 2025
  • 0 Comments

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த […]

உள்ளூர்

வரி தொடர்பில் அமெரிக்காவுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் நடைபெறுகின்றது- தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

  • April 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை […]

உள்ளூர்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு நேற்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர்

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகின்றார்களென ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு

  • April 10, 2025
  • 0 Comments

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09-04) நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய […]