முல்லைதீவில் பிரதேச செயலாளருக்கு அச்சுருத்தல் விடுத்துள்ள கசிப்பு உற்பத்தியாளர்கள், செய்வதறியாது அரச நிர்வாகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் 26.03.2025 இன்று சுட்டிக்காட்டப்பட்டது. இந் நிலையில் சட்டவிரோத மது மற்றும், போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். […]