உள்ளூர்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

  • March 21, 2025
  • 0 Comments

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச […]

உள்ளூர்

  • March 20, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது அதன்படி, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க இன்று பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது இதேவேளை 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் […]

உள்ளூர்

இலங்கை தமிழரசு கட்சி மாவட்டத்தில் 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

  • March 20, 2025
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11 மணியளவில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது. நேற்றையதினம் யாழில் உள்ள 05 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன் இன்று 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 17 உள்ளுராட்சி […]

உள்ளூர்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்தில் பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!

  • March 20, 2025
  • 0 Comments

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக’ போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று […]

உள்ளூர்

வியாழேந்திரனும் பிள்ளையானும் மக்களை மக்களை புதைக்கப்போகின்றார்கள் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்

  • March 20, 2025
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான்இ கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து […]

உள்ளூர்

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது- பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

  • March 19, 2025
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைத்தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் ஒப்புதல்

  • March 19, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. […]

இந்தியா

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் பயணமாகவுள்ளனர்

  • March 19, 2025
  • 0 Comments

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சியும் முதலீட்டு வர்த்தக மாநாடும் நடத்தப்படவுள்ளது – இலங்கை வர்த்தக சம்மேளனம்

  • March 17, 2025
  • 0 Comments

வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில், யாழ். குடா […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • March 17, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]