உள்ளூர்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கை கோர் குழு’ இலங்கைக்கு அழுத்தம்.

  • September 10, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் […]

உள்ளூர்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • August 4, 2025
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர்

யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்

  • June 27, 2025
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உள்ளூர்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்

  • June 27, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு (13-06) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் நியமனம்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈபிடிபி, தமிழரசுக் கட்சி சந்திப்பிற்கு கிழக்கிலும் கடும் எதிர்ப்பு

  • June 6, 2025
  • 0 Comments

டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம். கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் […]

உள்ளூர்

ஈழ போராட்டத்தில் முதல் முதலாக சயனைட் உட்கொண்டு உயிர் நீத்த பொன் சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவப் படத்துக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பொன் சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் ஆவார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

  • June 4, 2025
  • 0 Comments

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (11-06) மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் இன்று நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டுள்ளன.

உள்ளூர்

போதைப்பொருள் கடத்தல்காரனான ‘ ஷான் சுத்தா தப்பியோட்டம், கோட்டை விட்டசிறைக்காவலர்

  • June 3, 2025
  • 0 Comments

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் மே மாதம் 30 ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ ஷான் சுத்தா’ என அழைக்கப்படும் சம்பத் […]