உள்ளூர்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கை கோர் குழு’ இலங்கைக்கு அழுத்தம்.

  • September 10, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் […]

உலகம்

ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

  • September 7, 2025
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக இதுவரை நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல், தலைநகர் கீவிலுள்ள உக்ரைன் அமைச்சரவை கட்டிடத்தை தீப்பிடிக்கச் செய்து, ஒரு குழந்தையை உட்பட மூவர் உயிரிழக்க நேரிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் ட்ரோன்களும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால் 18 பேர் காயமடைந்ததுடன், பல கட்டிடங்கள் தீப்பிடித்தன. அமைச்சரவை கட்டிடத்தின் கூரையிலிருந்து புகை எழுந்தது காணப்பட்டது. அது நேரடி தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது விழுந்த சிதைவுகளால் ஏற்பட்டதா என்பது […]

உள்ளூர்

செம்மணி மனிதப்புதைகுழி பகுப்பாய்வுக்கு ஐ.சி.ஆர்.சி. க்கு நீதியமைச்சு அழைப்பு

  • September 7, 2025
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது. இதன்படி, செஞ்சிலுவை சங்கம் விரைவில் பங்கேற்கும் என அறியமுடிகிறது. செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • August 30, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்- அருட்தந்தை சிறில் காமினி

  • July 29, 2025
  • 0 Comments

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ‘ […]

உள்ளூர்

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

  • June 29, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே […]

உள்ளூர்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்

  • June 27, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மக்கள் போராட்டத்தின் அடையாளமாக ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

  • June 26, 2025
  • 0 Comments

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்று (26-06) தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து , அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

  • June 14, 2025
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30 முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில […]

உள்ளூர்

சுமந்திரனுக்கு செக் வைக்கும் கஜேந்திரகுமார்

  • June 6, 2025
  • 0 Comments

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன […]