உள்ளூர் முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடைப்பெற்றுள்ளது

  • February 26, 2025
  • 0 Comments

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (25-02-2025) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் ஆகியோர் பங்கேற்றனர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நாட்டில் நிலவும் பல்வேறு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இங்கு நீண்டநேரம் கருத்துப் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் படையினரின் உயர் மட்டத்தினருக்குமிடையில் அவசர சந்திப்பு

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை

  • February 25, 2025
  • 0 Comments

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது. ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஜனவரி 9ம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்

  • February 25, 2025
  • 0 Comments

விண்ணப்பிக்கப்ட்டுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்தார். 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளமையை அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், தேவையான அச்சிடும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாணவியெருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் குழந்தையை வீசியுள்ளார்

  • February 23, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வரி ஏய்ப்பு செய்த குற்றவாளி அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் விடுதலை

  • February 22, 2025
  • 0 Comments

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

  • February 21, 2025
  • 0 Comments

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்து மீறும் இந்திய கடற்தொழிலாளர்களுக்கெதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் – தீவக கடற்தொழில் அமைப்பு

  • February 21, 2025
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பி நல்லவரா கெட்டவரா? விசயமா?விசரா என ஆராய்நத குழு அறிக்கையை வெளியிட்டது

  • February 21, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் விஜித ஹேரத் மற்றும் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு நீதிமன்ற கொலையாளியின் சங்க அடையாள அட்டை போலியானதென சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

  • February 21, 2025
  • 0 Comments

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினராக அறியப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டை போலியானது எனவும், அது தமது சங்கத்தினால் வழங்கப்பட்ட அட்டை அல்ல எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினராக அறியப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன எனும் கணேமுல்ல சஞ்ஜீவ நேற்று முன்தினம் (19-02-2025) கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5 ஆம் இலக்க அறையில், வழக்கு விசாரணையின் இடையே சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் […]