யாழ் இணுவில் பகுதியில் தாயின் முன்னிலையில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல் தலைமறைவு பொலிஸார் அசமந்தம்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார். இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் […]