முக்கிய செய்திகள்

ஊடகங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளமை தொடர்பில் ஆராய வேண்டுமென நாமல் வலியுறுத்தியுள்ளார்

  • February 12, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும். இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

  • February 11, 2025
  • 0 Comments

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் மாடிக்கட்டடத்தில் […]

முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதி – சி.வி.சே.சிவஞானம்

  • February 11, 2025
  • 0 Comments

மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு, அவ்விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரை பதவி விலக்குவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றதென்கிறார் – தயாசிறி

  • February 9, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நாடகமொன்றை அரங்கேற்றி சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். சட்டத்துறையில் அரசியல் தலையீடுகளை செலுத்தாமல் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அந்த […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம்

  • February 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் […]

இந்தியா முக்கிய செய்திகள்

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

  • February 8, 2025
  • 0 Comments

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய […]

முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பி நிதி மோசடி செய்தாரா?

  • February 8, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்.

  • February 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், ‘ அரச நியமனத்தினை உறுதிப்படுத்து’, ‘காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே’, ‘அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே’, ‘வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்’ போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க வீசா தொர்பில் அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏகுளு கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் […]

முக்கிய செய்திகள்

அர்ச்சுனாவை விசர் என தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

  • February 5, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்ட ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, உரையாற்றிய போது மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினரானவின் செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினைகள் […]