முக்கிய செய்திகள்

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம் – பிரதி அமைச்சர சுசில் ரணசிங்க

  • February 5, 2025
  • 0 Comments

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை விவசாயிகளின் நலனுக்காக சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். விவசாயத்தை துரிதமாக முன்னேயேற்றக்கூடிய ஒரு நிறுவனமாக மகாவலி அதிகார சபையை குறிப்பிடலாம் எனவும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 40மூ மகாவலிக்கு சொந்தமானது எனவும், அதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் நிலப்பரப்பில் மீன்டும் விவசாயத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகாவலி மறுமலர்ச்சி வாரத்தை முன்னிட்டு குண்டசாலை, திகன, விக்டோரியா மற்றும் கொத்மலை’ […]

முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று  பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் […]

முக்கிய செய்திகள்

1 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் அம்பாறையில் இளைஞன் கைது

  • February 4, 2025
  • 0 Comments

நேற்று இரவு (3-02-2025) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார். குறித்த பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் […]

முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

  • February 1, 2025
  • 0 Comments

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), […]

முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • February 1, 2025
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

ரோகிங்யா அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கமுடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • February 1, 2025
  • 0 Comments

மனித சமூகம் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பின் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சுகாதார சீர்கேட்டால் சிசு மரண வீதம்,எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு- கபில ஜயரத்தன

  • February 1, 2025
  • 0 Comments

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. வருடம் தோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார். இலங்கை மருத்துவ சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ள அதே வேளை வருடாந்தம் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • January 30, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

கோட்டா அரசுக்கு நடந்ததே அநுர அரசுக்கு நடக்குமென விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

  • January 29, 2025
  • 0 Comments

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் அநுராதபுரத்தில் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைகழக விரிவுரிரையாளர்களை பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை

  • January 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அது கிடைத்த பின் கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைகளை முடிவுக்கு கொண்டவரும் எனவும் ஆகவே அதுவரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.