உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

  • January 19, 2025
  • 0 Comments

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.. 1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை . 4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை. […]

முக்கிய செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினை அடைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

  • January 19, 2025
  • 0 Comments

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும. அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் பொங்கு தமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நாள் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!

  • January 15, 2025
  • 0 Comments

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்…!

  • January 15, 2025
  • 0 Comments

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா […]

முக்கிய செய்திகள்

அநுர அரசு உள்ளுராட்சிமன்றத் தேரத்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

  • January 13, 2025
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து, […]

முக்கிய செய்திகள்

முஸ்லீம் மாணவி கடத்தப்பட்ட போது காப்பாற்ற முனைந்த இளைஞர் காயம் –

  • January 13, 2025
  • 0 Comments

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார். மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், ‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள்!

  • January 11, 2025
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் உடைய நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில், இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின்ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இவ் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் இவ் சிரமதானத்தில் கலந்து கொண்டனர். தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதி அண்மையில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலமை காரணமாக புற்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு!

  • January 11, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது. மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது, உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து, குழந்தையை மீட்டு, கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்போது குழந்தை உயிரிழந்துள்ளது. இதையும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • January 10, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகத்தை மக்கள் நம்பும் வகையில் மாற்ற வேண்டும் – தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர்

  • January 10, 2025
  • 0 Comments

காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் தற்போது மாறிவிட்டன,பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை,இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் […]