முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

  • January 10, 2025
  • 0 Comments

இன்று (10); யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த 75 வயதுடைய குமரேஸ்வரன் யோகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

  • January 9, 2025
  • 0 Comments

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்று (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இடியன் துப்பாக்கியால் அத்தானை சுட்டார் மச்சான்

  • January 9, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவரை […]

உள்ளூர்

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு! (நேரலை)

  • January 7, 2025
  • 0 Comments

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம், இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளைஇ இந்த வாரத்திற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் நடைபெறவுள்ளதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் […]

உள்ளூர்

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!

  • January 5, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் குறித்த கடிதம் […]

கனடா

கனடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 30, 2024
  • 0 Comments

ரொறன்ரோ மற்றும் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது 20 முதல் 40 மில்லி மீட்டர் வரையிலான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாழ்நிலைப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி பனி படலத்தினால் சூழ்ந்து இருப்பதனால் மழைநீர் நிலத்திற்குள் உள்ளிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என […]

உள்ளூர்

கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

  • December 25, 2024
  • 0 Comments

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்  

உள்ளூர்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • December 25, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

கனடா

ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • December 18, 2024
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோவில் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.   இதையும் படியுங்கள்>கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார். https://studio.youtube.com/channel/UCH1DavrHcT165zBxt3eG7Tg/videos/short?filter=%5B%5D&sort=%7B%22columnType%22%3A%22date%22%2C%22sortOrder%22%3A%22DESCENDING%22%7D

உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை

  • December 16, 2024
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்; அருச்சுனாவுக்கும் சட்டத்தரணி என். கௌசல்யாக்கும் (தங்கம்) தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]