உள்ளூர்

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 12ம் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது – சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

  • June 5, 2025
  • 0 Comments

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஏற்கனவே […]

உள்ளூர்

ஈழ போராட்டத்தில் முதல் முதலாக சயனைட் உட்கொண்டு உயிர் நீத்த பொன் சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவப் படத்துக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பொன் சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் ஆவார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

  • June 4, 2025
  • 0 Comments

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (11-06) மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் இன்று நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் காலந்துரையாடப்பட்டுள்ளன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

விபத்தில் மரணமடைந்த இந்திய தூதரக அதிகாரியின் மகனும் உயிரிழப்பு

  • June 2, 2025
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் – கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். இந்த விபத்தில் அவரின் மனைவி (சீதாலக்ஷ்மி – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மகன் மற்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சிறைச்சாலையின் அச்சுபிரிவில் மகிந்தானந்தாவும் நளினும் வேi செய்கின்றார்கள்

  • June 1, 2025
  • 0 Comments

நீதிமன்றத்தினால் கடுழிய சிறைச்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நளின் பெர்ணான்டோவிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுபிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகள் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் கொலை மற்றும் பாலியல்வன்முறை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சப்பல் பிரிவிலிருந்து இருவரையும் பிரித்து ஒன்றாக வைத்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவரினதும் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இருவருக்கும் அரசியல் எதிரிகள் இருக்ககூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மனித இறப்புக்கான காரணம் குண்டுதாக்குதல்,சூட்டுக்காயங்கள் என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

  • May 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் […]

உள்ளூர்

புலம்பெயர் தமிழர்கள் வீசாவையும் வர்த்தகங்களையும் பாதுகாப்பதற்கு மீண்டும் யுத்தம் ஏற்படும் என்கிறார்கள்- சரத் பொன்சேக்கா

  • May 29, 2025
  • 0 Comments

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை பிரதேசசபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சியும் முஸ்லீம் காங்கிரஸ் ஒப்பந்தம்

  • May 27, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் இன்று திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான […]

உள்ளூர்

இந்திய – இலங்கை அரசின் நிதியில் மன்னாரில் நிறுவிய வீடுகள் ; பயனாளிகளிடம் கையளிப்பு

  • May 27, 2025
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் கடந்த திங்கட்கிழமை (26-05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி […]

உள்ளூர்

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தரான பிரபாகரன் விபத்தில் பலி

  • May 26, 2025
  • 0 Comments

யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மூவர் காயமடைந்துள்ளனர். கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றுஇ யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காரில் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்இ அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரை ஓட்டிச் […]