உள்ளூர்

பிரம்டன் இனப்படுகொலை நினைவகம் நிறுவியதால் நித்திரையிழந்த மகிந்தவின் புத்தா நாமல்

  • May 14, 2025
  • 0 Comments

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் […]

உள்ளூர்

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிக்கு சண்டித்தனம், விவசாயிகள் 3வர்; பொலிஸாரால் கைது

  • May 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக […]

உள்ளூர்

இலங்கையில் கையிருப்பு வீழ்ச்சியில் என மத்திய வங்கி அறிவித்துள்ளது

  • May 8, 2025
  • 0 Comments

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2025 ஏப்ரல் மாத இறுதியில் 3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பானது ஏப்ரல் மாத இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

உள்ளூர்

கொழும்பில் பரபரப்பான காலை வேளையில் இளைஞனொருவனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்

  • May 5, 2025
  • 0 Comments

கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் இன் காலை 6.35 மணியளவில் 19 வயது இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிராய்ப்புகளுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் நகர சபையின் ஊழியராக இருந்ததுடன், கடற்கரை வீதிக்கு […]

உள்ளூர்

ஊடகவியலாளர்கள் தராகி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தலும் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டமும் இடம் பெற்றது

  • April 28, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான பொலிஸார் சீருடைகளுடன், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் […]

உள்ளூர்

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் இடையூறாக இருக்கின்றனர் – வடக்கு ஆளுநர் ஒப்புதல்

  • April 23, 2025
  • 0 Comments

விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22-04) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் கோட்டை விட்ட சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஜேவிபிக்கு எதிராக யாழில் குமுறல்

  • April 22, 2025
  • 0 Comments

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளது – சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாருக்கு தண்ணி காட்டும் இஷாரா செவ்வந்தி

  • April 22, 2025
  • 0 Comments

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என […]

உள்ளூர்

இலங்கையில் வேருன்றும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் – ஞானசார தேரர்

  • April 22, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு உண்மையான நீதியை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும்,இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிள்ளையானுடன் பிணக்கால் சிறையில் இருக்கும் தாயாரை விடுவிக்குமாறு மகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

  • April 21, 2025
  • 0 Comments

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வ மக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட […]