உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசாங்கம் அரசியல் இலாபமீட்டுவதற்காக பயன்படுத்துகின்றது – நாமல்
உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும்,பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள […]