உள்ளூர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் நேற்று மட்டும் 6 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

  • March 24, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் இடம்பெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 22 ஆம் திகதி எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. எனினும் 23 ஆம் திகதி நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அலுவிஹாரயிலிருந்து பலாபத்வல சந்தி வரையிலான வீதிகளில் வேட்பாளர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட […]

உள்ளூர்

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா ஆகியோரை பிரிட்டன் தடை செய்துள்ளது

  • March 24, 2025
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று ,லங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது

  • March 24, 2025
  • 0 Comments

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்ச சம்பவமானது கடந்த சனிக்கிழமை அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையின் போது, தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்று அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கசிப்பு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் தொடர்பில்லை- பொலிஸார்

  • March 24, 2025
  • 0 Comments

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு யோசிதத ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி மற்றும் குழுவினருடன் சென்றுள்ளார் இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோசித ராஜபக்ஸவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது யோசிதத ராஜபக்ஸவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதல் இரவு நேர களியாட்ட […]

உள்ளூர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெல்வது மெதாடர்பில் முல்லையில் தமிரசுக் கட்சி மந்திராசோனை

  • March 23, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்குமிடையில் நேற்று (22-03) கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தைகிழக்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும், […]

உள்ளூர்

வவுனியா சிறைச்சாலையிருந்த கைதி லாவகமாக தப்பினார்- பொலிஸார் தேடுதல்

  • March 22, 2025
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதியை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு 114 பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது

  • March 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அப்பா பொலிஸ் என்பதால் இலஞ்சம் பெற்ற மகனுக்கு விளக்கமறியல்!

  • March 17, 2025
  • 0 Comments

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மீண்டும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • March 16, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக வாழச்சேனை, கிரான், செங்கலடி, வெல்லாவெளி, போன்ற தாழ்நில பகுதிகளில் மழைநீர் காணப்பட்ட போதிலும் இன்று பெய்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கிரான், வாகரை, செங்கலடி, போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான பாதைகள் ஊடாக வெள்ள நீர் […]