உள்ளூர் முக்கிய செய்திகள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை – ரணில் நிராகரித்துள்ளார்

  • March 16, 2025
  • 0 Comments

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் புதிய கூட்டணி – சைக்கிள் சின்னத்தில் போட்டி

  • March 16, 2025
  • 0 Comments

ஜனநாயக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சி மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளதாக ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதா அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15-03-2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் பெக்கோ டிரெயில் உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக தெரிவு

  • March 14, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘பெக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது. ‘பெக்கோ டிரெயில்’ என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டின் வழியாக 300 கிலோமீட்டர் ஒரு தொலைதூரப் நடைப்பயணமாகும். இந்த 22 நிலை நடைப்பயணமானது ஆசியாவின் தெற்கில் உள்ள மிகச்சிறந்த சூழலியல் மற்றும் மலைப் பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லும். நடைப்பயணம் கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவுக்குச் செல்கிறது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமிழரசுக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

  • March 14, 2025
  • 0 Comments

வவுனியா நகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது

  • March 4, 2025
  • 0 Comments

மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்குண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்

  • March 4, 2025
  • 0 Comments

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ். உடுவில் கற்பமுனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (03-02-2025) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார். இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்நிலையக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டத்தை இணை அனுசரணை நாடுகள் வரவேற்றுள்ளன

  • March 4, 2025
  • 0 Comments

நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் – இணை அனுசரணை நாடுகள் வேண்டுகோள் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இணை அனுசரணை நாடுகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் வடஅயர்லாந்து கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடக்குமசடோனியா ஆகிய நாடுகள் தமது அறிக்கையில் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் சார் படங்கள் மற்றும் காணொளிகள் பகிர்வு

  • March 3, 2025
  • 0 Comments

யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக பல்வேறு தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக வலையமைப்பில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகளும் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சமூக ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பாலியல் காட்சிகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஓய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்கள் இருவர் பிணையில் விடுவிப்பு

  • March 2, 2025
  • 0 Comments

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

  • March 2, 2025
  • 0 Comments

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02-03-2025) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01-03-2025) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார். புனித ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு […]