உள்ளூர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தலுடன் ; தொடர்புடைய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது

  • March 2, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியா வீதிப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் கீத் நொயார் வேனில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (01-03-2025) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்பை இலங்கையில் ஏற்பதற்கான வட்டமூல வர்த்தமானி வெளியிடப்படவில்லை- அஜித் பி. பெரேரா

  • March 2, 2025
  • 0 Comments

வெளிநாடு நீதிமன்றங்களில் வழங்கப்படும் விவாகரத்து வழக்கு தீர்ப்புகள் எமது நீதிமன்றங்களில் அனுமதிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அதுதொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என்பதை அறியாமல், அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தீர்ப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு இடமிருக்கிறது. அதனால் அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (01-03-2024) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில்

  • March 2, 2025
  • 0 Comments

பிரதமர் உட்பட முக்கிய இந்திய தொழிலதிபர்களை சந்தித்தார் ரணில் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01-03-2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவு

  • March 1, 2025
  • 0 Comments

கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர மற்றும் கிரியுல்ல வீடுகளை சோதனை செய்த போதிலும், அவர் அந்த வீடுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

  • March 1, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு நேற்று (28-02-2025) கைது செய்துள்ளனர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கணேமுல்ல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா மெனிக்பாமில் இருந்த 27 இளைஞர்கள்; கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் உள்ளது-சாணக்கியன் எம்.பி

  • March 1, 2025
  • 0 Comments

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் திரிபோலி பெட்ரோன் ஊடாக இடம்பெற்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (25-02-2025) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் சுமந்திரன் திட்டவட்டம்

  • February 26, 2025
  • 0 Comments

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நேற்று (25-02-2025) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் சந்தித்துள்ளார்

  • February 26, 2025
  • 0 Comments

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ 5 மணிநேரத்தின் பின் சீ.ஐ.டியிலிருந்து வெளியேறினார்

  • February 26, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் யு-330 விமானங்கள் 6 மற்றும் யு- 350 விமானங்கள் 8 ஆகியவற்றை கொள்வனவு செய்தமைக்கான எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று) காலை 09.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]