இலங்கையர்கள் 200 பேருக்கு இண்டர்போல் ரெட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது- பொலீஸ் ஊடகப் பேச்சாளர்
கடந்த ஒரு ஆண்டுக்குள் இலங்கை போலீசாரின் கோரிக்கையின் பேரில் 200 இண்டர்போல் ரெட் நோட்டிஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பின்னர், மொத்தம் 17 சந்தேகநபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சட்டநடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு பதவியேற்றதையடுத்து அனைத்து ரெட் நோட்டிஸ்களும் வெளியிடப்பட்டதாகவும் வூட்லர் உறுதிப்படுத்தினார். சர்வதேச சட்ட அமலாக்கத்தின் சிக்கல்களை விளக்கிக் கூறிய அவர், […]