உள்ளூர் முக்கிய செய்திகள்

கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடையும் நாளாகும். – ராஜித சேனாரத்ன

  • April 20, 2025
  • 0 Comments

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19-04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு […]

உள்ளூர்

நிகழ்நிலை காப்பு சட்ட மாற்றீடு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

  • April 18, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர்

காணியிழந்த மக்களுடன் பொலிஸார் வசாவிளான் சந்தியில் சண்டித்தனம்

  • April 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார். தாம் எமது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மாகாண சபைகளை வலுப்படுத்துமாறு தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை

  • April 16, 2025
  • 0 Comments

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை தேசிய சமாதானப் பேரவை வரவேற்றுள்ளது அத்துடன் மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகள் பதிவு!

  • April 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 159 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.                                         […]

உள்ளூர்

போதைப்பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் கைது!

  • April 14, 2025
  • 0 Comments

போதைப்பொருட்களுடன் கூடிய குறித்த படகை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்த பிறகு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே 6 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட தெனினலங்கையை சேர்ந்தவர்கள் ஆகும். சந்தேக நபர்களிடம் இருந்து […]

உள்ளூர்

விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி

  • April 13, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று முன்தினம் (11-04) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதற்கு விளைகின்றனர். கடந்த காலங்களில் திகன, அக்குரணை, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பல வழிபாட்டு ஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் எதிர்வரும் காலங்களில் மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, […]

உள்ளூர்

மனிதப் படுகொலைக்காக ரணிலுக்கு வயது போனாலும் தண்டனை வழங்கப்படும். ஜேவிபி அரசு

  • April 13, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் […]

உள்ளூர்

அரசாங்கம் அதிகாரப்போக்கில் செயற்படுகிறதென வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் குற்றஞ்சாட்டு

  • April 13, 2025
  • 0 Comments

நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் முற்றத்தில் கோவிலின் முகப்பினை மறைத்து மேடை அமைத்து தேசிய மக்கள் சக்தி பிரச்சாரக் கூட்டத்தினை நடத்தியது. அப்பிரச்சாரம் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என்பதை நேரில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலர்கள் முன் சுட்டிக்காட்டினேன். அது பற்றிய முறைப்பாடுகளையும் மேற்கொண்டேன். சட்ட, […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சஜித்தை டெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்

  • April 12, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் […]