வவுனியாவில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில்; நடவடிக்கை எடுக்க வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி
2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08-04) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி […]