உள்ளூர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் சாத்தியமென்கிறார் அஜித் பி. பெரேரா எம்.பி

  • March 29, 2025
  • 0 Comments

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள செய்தி சேவைக்கு நேற்று (28-03)வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர்

பாலஸ்தீன மக்களுககாக கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டமொன்று; இடம்பெற்றது.

  • March 29, 2025
  • 0 Comments

இந்த ஆர்ப்பாட்டமானது, இன்று ( ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி தமிழரசுக் கட்சியை சந்திப்பாரா? பழைய பஞ்சாக்கத்துடன் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (28-03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு நடத்திய கும்பல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம், நேற்றிரவு (28-03) இடம்பெற்றுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் […]

உள்ளூர்

ஆனையிறவு உப்பளத்தில் இன்று உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம், நாளை தொடக்கம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார்

  • March 29, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார். இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

மனித உரிமை மீறல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தால் தண்டித்தேயாக வேண்டும் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

  • March 28, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக […]

முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவருக்கு விளக்கமறியல் 25 பேர் பிணையில் விடுதலை

  • March 28, 2025
  • 0 Comments

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜேவிபி அரசின் சாதனை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கேலிக்கூத்தாக மாற்றியது மட்டுமே- ஈபிடி.பி

  • March 27, 2025
  • 0 Comments

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன என தெரிவித்தார். ஆனால் இந் ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது என்றும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபா வரை மடடுமே செலவிடலாம்

  • March 27, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரை செலவிடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.