உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 35 வயதுடைய பெண் திடீர் மரணம் காரணம் தெரியவில்லையென வைத்தியர்கள் கைவிரிப்பு

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்; நிர்வாகச் செயலாளரான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்தார் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணத்தை அறிய முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளை அழிக்குமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கே நானே கட்டளையிட்டேன்- மகிந்த விசேட அறிக்கை

  • March 27, 2025
  • 0 Comments

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டுப் போர் இடம்பெற்ற குறித்த காலத்தில் இலங்கையின் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாமே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்தத் தாமே முடிவு செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். […]

உள்ளூர்

இலங்கை இந்திய அரசுகள் பேச வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

  • March 26, 2025
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெட்டிக்கொலை

  • March 26, 2025
  • 0 Comments

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான மாணவ பட்டதாரிகளும் அரச வேலை கேட்டு போராட்டம்

  • March 26, 2025
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இன்று கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது ”இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் […]

உள்ளூர்

மட்டக்களப்பு இளைஞர்கள் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்

  • March 26, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதாக தெரியவருகின்றத முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • March 25, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • March 25, 2025
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • March 25, 2025
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • March 25, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.