உள்ளூர்

வவுனியா சிறைச்சாலையிருந்த கைதி லாவகமாக தப்பினார்- பொலிஸார் தேடுதல்

  • March 22, 2025
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதியை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

  • March 22, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர், ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார். […]

உள்ளூர்

மன்னாரில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவில் அனுமதி

  • March 22, 2025
  • 0 Comments

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். […]

உள்ளூர்

யாழில் மைத்துனன் தாக்கியதால் மச்சான் உயிர்மாய்ப்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே தவறான முடிவெடுத்து நேற்று (21-03-2025 ) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் கடந்த 18ஆம் திகதி அவரது மைத்துனருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் தனது மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியவர், வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டுள்ள நிலையில், […]

உள்ளூர்

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது

  • March 21, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய நாளை சனிக்கிழமை (22) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80 000க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக செலவுகளும் அதிகமாகவே காணப்படும். அதேவேளை வேட்பாளர்கள் செலவிடக் கூடிய […]

உள்ளூர்

மலையக பெண் ஆளுமையொருவர் நீதவானாக நியமனம் பெறுகிறார்

  • March 21, 2025
  • 0 Comments

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஸ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆசேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில்இ அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் பண்டாரவளை நீதிமன்ற பிரபல சட்டத்தரணி சிரில் ராஜ்ஜின் மனைவியும் பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஸ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார். இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் […]

உள்ளூர்

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு 114 பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது

  • March 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

  • March 21, 2025
  • 0 Comments

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர்

மகிந்தவின் மனைவி காணி புரோக்கராகவும் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

  • March 21, 2025
  • 0 Comments

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்புல்கொடை மற்றும் களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் தான் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பந்தப்பட்ட காணி கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ‘இந்த காணி மஹிந்த ராஜபக்ஷ ஆன்மீக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்த காணி இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டு 10 […]

உள்ளூர்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

  • March 21, 2025
  • 0 Comments

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச […]