உள்ளூர்

வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எம்மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல- அமைச்சர் சந்திரசேகரம்

  • March 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத் தாக்கலின்போது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் […]

உள்ளூர்

  • March 20, 2025
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது அதன்படி, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க இன்று பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது இதேவேளை 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் […]

உள்ளூர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

  • March 20, 2025
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வெல்லுமென்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • March 17, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பணம் கட்டியுள்ளது

  • March 17, 2025
  • 0 Comments

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், சாவகச்சேரி நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், காரைநகர் பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,வேலணை பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

  • March 17, 2025
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ரிஸாட் எம்.பியின் கட்சியினர் ரவூப் ஹக்கீம் எம்.பியின் கட்சியில் இணைந்தனர்

  • March 16, 2025
  • 0 Comments

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட்தின் வெற்றிக்கு உழைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு கே.ஆர்.எம். றிசாட் தலைமையில் அவருடைய இல்லத்தில் நேற்று (15) சனிக்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த இவர்கள் அக் கட்சியில் பொருத்தமான வேட்பாளர்கள் நியமிக்கப்படாமையின் காரணமாகவும் அகில இலங்கை […]

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணம் உட்பட பல மாகாங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

  • March 16, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்றுஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஏன்? அஞ்சுகின்றது என கஜேந்திரகுமார் கேள்வி

  • March 16, 2025
  • 0 Comments

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை – ரணில் நிராகரித்துள்ளார்

  • March 16, 2025
  • 0 Comments

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.