உள்ளூர்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்

  • June 27, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண […]

உள்ளூர்

மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

  • June 26, 2025
  • 0 Comments

மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (26) மதியம் மடுத் திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட் திரு. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் அகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதி

  • June 26, 2025
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்திய இழுவைப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் சேதங்கள் குறித்து மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்தனர். உரிமம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுருக்கு மடி வலைகள் போன்ற தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், லைட் கோர்ஸ் மீன்பிடி முறைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • June 25, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

  • June 14, 2025
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30 முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு (13-06) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் நியமனம்

  • June 14, 2025
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

உள்ளூர்

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகளை சங்கு சைக்கிள் கூட்டணி கைப்பற்றும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • June 7, 2025
  • 0 Comments

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் […]

உள்ளூர்

சுமந்திரனுக்கு செக் வைக்கும் கஜேந்திரகுமார்

  • June 6, 2025
  • 0 Comments

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈபிடிபி, தமிழரசுக் கட்சி சந்திப்பிற்கு கிழக்கிலும் கடும் எதிர்ப்பு

  • June 6, 2025
  • 0 Comments

டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம். கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் […]