உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • March 5, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலை சந்தேக நபரான செவ்வந்தி பற்றி தகவல் தருவோருக்கு 12 இலட்சம் சன்மானம்

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலைக்கு உதவிய இஷாரா செவ்வந்தி இந்தியா சென்றுள்ளார்- பொலிஸ்

  • March 4, 2025
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்றத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்த்தாகவும் கூறியுள்ளனர். எனினும், இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, செவ்வந்தியைப் பற்றிய அனைத்து தகவல்களும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கு இந்தியா […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தை இளங்குமரன் எம்பி பார்வையிட்டுள்ளார்

  • March 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று (03-03-2025) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

  • March 4, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

  • March 4, 2025
  • 0 Comments

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு உலங்குவானூர்தியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் வடை வாங்கினால் சட்டை ஊசி இலவசம். புதிய ஒப்பர்

  • March 4, 2025
  • 0 Comments

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையத்துக்கு அருகில் சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03-03-2025) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல்

  • March 4, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லையென எஸ்.சிறீதரன் அறிவித்துள்ளார்

  • March 4, 2025
  • 0 Comments

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டத்தை இணை அனுசரணை நாடுகள் வரவேற்றுள்ளன

  • March 4, 2025
  • 0 Comments

நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் – இணை அனுசரணை நாடுகள் வேண்டுகோள் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இணை அனுசரணை நாடுகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் வடஅயர்லாந்து கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடக்குமசடோனியா ஆகிய நாடுகள் தமது அறிக்கையில் மேலும் […]