உள்ளூர்

இந்திய – இலங்கை அரசின் நிதியில் மன்னாரில் நிறுவிய வீடுகள் ; பயனாளிகளிடம் கையளிப்பு

  • May 27, 2025
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் கடந்த திங்கட்கிழமை (26-05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி […]

உலகம்

உக்ரைனின் விமானத் தாக்குதலில் இருந்து ரஷிய ஜனாதிபதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

  • May 26, 2025
  • 0 Comments

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். புதினின் ஹெலிகாப்டர் பாதையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நடைப்பெறவுள்ளது

  • May 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். […]

உள்ளூர்

மாகாணசபைத்தேர்தலை அரசாங்கம் நடத்தாதென சி.வி.விக்னேஸ்வரன் ஆருடம். ஐயோ வடை போச்சே…..

  • May 25, 2025
  • 0 Comments

அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத ;தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22-05) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 2 பட்டதாரி மகள்மாருக்கு திருமணம் நடக்காததால் தந்தை தற்கொலை

  • May 24, 2025
  • 0 Comments

யாழ் – சங்கானையில் பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த தந்தை தவறான முடிவெடுத்து நேற்று (23-05) உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவருக்கு 63 வயதாகும் இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மின்சார சபையின் அசமந்தத்தால் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி

  • May 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (23-05) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார். குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார். இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

  • May 24, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சுசார் மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23-05) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

உள்ளூர்

அடக்கியாளப்படும் ஆனையிறவு உப்பள தெரிழலாளர்களின் தொடர் போராட்டமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் பதிவு

  • May 23, 2025
  • 0 Comments

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நேற்று (22-05) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் […]

உள்ளூர்

அமைச்சர் சந்திரசேகர் அடித்தார் அந்தர் பெல்டி பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக தெரிவிக்கவில்லையாம்

  • May 23, 2025
  • 0 Comments

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22-05) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது […]

உள்ளூர்

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாவிட்டால் பொருளாதார சுனாமியில் சிக்குமென சஜித் எச்செரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் தொடங்கிய தொழிற்சாலை இன்று முற்றிலும் மூடப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் 2028 முதல் நாட்டின் கடனை திரும்ப செலுத்த 5மூ பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிதிச் சட்ட கட்டளைகள் மீதான விவாதத்தில் தெரிவித்தார். தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு, 5மூ வளர்ச்சியை அடைவது கடினம் என்ற அவர், இவ்வாறு வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்படவில்லை […]