உள்ளூர்

உள்ளூராட்சி சபை தேர்தல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

  • May 6, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும் களுத்துறை […]

உள்ளூர்

ஊழலை ஒழிக்க உறுதிமொழி – இன நல்லிணக்கத்துக்கும் அரசு உறுதிபூர்வம்: சபாநாயகர்

  • May 5, 2025
  • 0 Comments

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் முழுமையான உறுதியுடன் செயற்படுவதாகவும், இன மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஊழலை ஒழிக்கும் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வகையான கருத்துகளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்களை கடந்த (02) ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்து பேசியபோது […]

உள்ளூர்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர்

கிளிநொச்சியில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ளு.முரளிதரன் , உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

உள்ளூர்

தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது

  • May 2, 2025
  • 0 Comments

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராகவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் […]

உள்ளூர்

ஊடகவியலாளர்கள் தராகி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தலும் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டமும் இடம் பெற்றது

  • April 28, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான பொலிஸார் சீருடைகளுடன், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இருவரை காதலித்த பல்கலைக்கழக மாணவனின் காதல் மரணத்தில் முடிந்தது

  • April 27, 2025
  • 0 Comments

காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக […]

உள்ளூர்

கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

  • April 25, 2025
  • 0 Comments

20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில், வீட்டின் உரிமையாளரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  • April 25, 2025
  • 0 Comments

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மின்னல் மற்றும் இடி ஏற்படும் […]