உள்ளூர் முக்கிய செய்திகள்

சிறைச்சாலையின் அச்சுபிரிவில் மகிந்தானந்தாவும் நளினும் வேi செய்கின்றார்கள்

  • June 1, 2025
  • 0 Comments

நீதிமன்றத்தினால் கடுழிய சிறைச்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நளின் பெர்ணான்டோவிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுபிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகள் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் கொலை மற்றும் பாலியல்வன்முறை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சப்பல் பிரிவிலிருந்து இருவரையும் பிரித்து ஒன்றாக வைத்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருவரினதும் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இருவருக்கும் அரசியல் எதிரிகள் இருக்ககூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது

  • June 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது. (262 ஆம் பிரிவு) உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 66 (2) அத்தியாயத்தின் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (31) பிரசுரித்துள்ளது. பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் நிர்வாக மாவட்டத்தில் உள்ள,ஒவ்வொரு தொகுதிகளுக்காக தெரிவு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

“Clean Sri Lanka” ஒத்துழைப்பில் கொழும்பும் அண்டிய பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

  • May 31, 2025
  • 0 Comments

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Clean Sri Lanka” ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30-05) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது. நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் கவனமாக அவதானித்து வருகிறதென அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்

  • May 27, 2025
  • 0 Comments

அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய கொவிட் 19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து […]

உள்ளூர்

இந்திய – இலங்கை அரசின் நிதியில் மன்னாரில் நிறுவிய வீடுகள் ; பயனாளிகளிடம் கையளிப்பு

  • May 27, 2025
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் கடந்த திங்கட்கிழமை (26-05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மின்சார சபையின் அசமந்தத்தால் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி

  • May 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (23-05) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார். குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார். இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. செக் வைத்தது ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

  • May 23, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் வலியுறுத்தப்பட்டுள்ள ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான ‘அரசாங்கத்தின் செயற்திட்ட ட்ரக்கர்’ எனும் சுயாதீன இணையவழித்தளத்தை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் மறுசீரமைப்பு செயன்முறையில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் நோக்கிலான ஓர் நடவடிக்கையாக இந்த கண்காணிப்பான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஊழல், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் பொறுப்பற்ற ஆட்சிமுறை ஆகியவற்றை முடிவுக்குக்கொண்டுவருமாறுகோரி உருவான ‘அரகலய’ எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இடம்பெற்று […]

உள்ளூர்

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அரச தரப்பில் ஆதரவு வழங்குவதாக சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • May 20, 2025
  • 0 Comments

”யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று (19-05) இடம்பெற்ற செய்தியாளர் […]

உள்ளூர்

கல்கிசையில் இளைஞனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரி கைது

  • May 19, 2025
  • 0 Comments

அண்மையில் கல்கிசையில் 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய இருவர் உட்பட மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி வசம் இருந்த ஒரு கைக்குண்டு மற்றும் ஒன்பது மிமீ துப்பாக்கியின் 15 தோட்டாக்கள், ஒரு மோட்டார் […]

உள்ளூர்

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் மனிதகுலத்திற்கெதிராக செய்த குற்றங்களுக்காக பதில் சொல்லும் நாளை எதிர்பார்க்கின்றோம் – பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

  • May 19, 2025
  • 0 Comments

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச் செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம். உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக […]