உள்ளூர்

பிரம்டன் இனப்படுகொலை நினைவகம் நிறுவியதால் நித்திரையிழந்த மகிந்தவின் புத்தா நாமல்

  • May 14, 2025
  • 0 Comments

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் […]

உள்ளூர்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றங்களில் தமிழசுக்கட்சிக்கு ஆதரவளிக்க தயாரென சயிக்கல் கட்சி தெரிவித்துள்ளது

  • May 10, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்பாணத்தில் இன்று ) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு காலச் சூழலில் […]

உள்ளூர்

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி மாணவர்கள் அமைதி போராட்டம்

  • May 9, 2025
  • 0 Comments

16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

யாழில் மர அரியும் இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

  • May 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07-05) இடம்பெற்றுள்ளது. ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் இயந்திரம் வெட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் உயிரை மாய்த்த மாணவிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் !

  • May 8, 2025
  • 0 Comments

கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 323 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3வர் கைது கைது

  • May 7, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (06-05)இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர்

கொழும்பில் பரபரப்பான காலை வேளையில் இளைஞனொருவனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்

  • May 5, 2025
  • 0 Comments

கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் இன் காலை 6.35 மணியளவில் 19 வயது இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிராய்ப்புகளுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் நகர சபையின் ஊழியராக இருந்ததுடன், கடற்கரை வீதிக்கு […]

உள்ளூர்

கிளிநொச்சியில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

  • May 5, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ளு.முரளிதரன் , உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

உள்ளூர்

நல்லை ஆதீன குருமுதல்வர் பரிபூரணம் அடைந்தார்

  • May 2, 2025
  • 0 Comments

இயற்கையெய்திய நல்லை ஆதீன குருமுதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர் பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன சுவாமியின் புகழுடல் இன்று காலை 6.15 அளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டுவரப்பட்டது யாழ்ப்பாணத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிற்பகல் 5 மணி அளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.