உள்ளூர் முக்கிய செய்திகள்

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்படலாமென ரணில் தெரிவிப்பு

  • April 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : அமெரிக்காவின் சமீபத்திய ‘பரஸ்பர’ வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா அதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வர்த்தக பதட்டங்கள் தொழிற்சாலை மூடல்கள், பெரிய அளவிலான வேலை இழப்புகள் மற்றும் விரிவடையும் வர்த்தக பற்றாக்குறைகள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

டொனால்ட் ட்ரம்புக்கு அநுரகுமார கடிதம் வரியை நீக்க கோரி

  • April 9, 2025
  • 0 Comments

இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என தொழில் அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (8-04) நடைபெற்ற அமர்வின் போது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

 வவுனியாவில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில்; நடவடிக்கை எடுக்க வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

  • April 9, 2025
  • 0 Comments

2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08-04) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

நாமல் ராஜபக்ஷ காசு களவாடல் தொடர்பில் சி.ஐ.டியின் விசாரணையில்

  • April 7, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என அன்று அச்சுறுத்திய கட்சி ஜேவிபி என ஐ.தே.கட்சி தெரிவிப்பு

  • April 4, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார். ஐ.தே.க.வின் யாழ். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு தொடரும் விளக்கமறியல்

  • April 3, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு […]

உள்ளூர்

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் நடை பெற்றது.

  • April 3, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னை நாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்pல் 96 கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த மூவர் கைது!

  • April 1, 2025
  • 0 Comments

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (30-03) இரவு கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா […]

உள்ளூர்

தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 31 வது மாடியிலிருந்து விழுந்த இளைஞர் மரணம். கொழும்பில் சம்பவம்

  • March 31, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அந்த ஹோட்டலில் அறையில் ஒன்றில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ; அதில், ‘மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் தினமும் நினைத்து வேதனைப்படுகிறேன்’ என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம் […]