முக்கிய செய்திகள்

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக கிண்ணியாவில்; அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்

  • March 31, 2025
  • 0 Comments

நோன்பு பெருநாள் தினமாகிய இன்று அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது. இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டணப் பேரணியில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சர்வதிகாரம் எழிற்சி பெற்று வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

  • March 31, 2025
  • 0 Comments

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30-03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், நாடு […]

உள்ளூர்

முல்லைத்தீவு கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது

  • March 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபரான முன்னாள் கிராம சேவையாளர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

உள்ளூர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் சாத்தியமென்கிறார் அஜித் பி. பெரேரா எம்.பி

  • March 29, 2025
  • 0 Comments

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள செய்தி சேவைக்கு நேற்று (28-03)வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர்

ஆனையிறவு உப்பளத்தில் இன்று உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம், நாளை தொடக்கம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

எங்களுடைய கைகளிலேயே ஆயுதங்கள் திணிக்கப்பட்டன என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

  • March 29, 2025
  • 0 Comments

ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு […]

முக்கிய செய்திகள்

மனித உரிமை மீறல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தால் தண்டித்தேயாக வேண்டும் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

  • March 28, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரம் பெண் வைத்தியரை வல்லுறவுக்கொண்ட சந்தேகநபரை வைத்தியர் இன்று அடையாளம் காட்டினார்

  • March 28, 2025
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த 10 திகதி (10-03) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காலனித்துவ ஆட்சியில்இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கேட்காத பிரிட்டன் எனக்கெதிராக தடைகளை விதிப்பது விசித்திரம் – வசந்த கரனாகொட

  • March 27, 2025
  • 0 Comments

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார். பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா […]

உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஞானசார தேரர் புலனாய்வுப்பிரிவுக்கு சொல்ல வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது

  • March 26, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த […]