உள்ளூர்

கல்கிசையில் இளைஞனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரி கைது

  • May 19, 2025
  • 0 Comments

அண்மையில் கல்கிசையில் 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய இருவர் உட்பட மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி வசம் இருந்த ஒரு கைக்குண்டு மற்றும் ஒன்பது மிமீ துப்பாக்கியின் 15 தோட்டாக்கள், ஒரு மோட்டார் […]

உள்ளூர்

பிரம்டன் இனப்படுகொலை நினைவகம் நிறுவியதால் நித்திரையிழந்த மகிந்தவின் புத்தா நாமல்

  • May 14, 2025
  • 0 Comments

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்தது பேரானந்தமென்கிறார் தென்னிந்திய நடிகர் எம்.எஸ் பாஸ்கர்

  • May 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 42 நாட் […]

உள்ளூர்

முல்லைத்தீவு குருந்தூர்மலை பிக்கு சண்டித்தனம், விவசாயிகள் 3வர்; பொலிஸாரால் கைது

  • May 10, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக […]

உள்ளூர்

இலங்கையில் கையிருப்பு வீழ்ச்சியில் என மத்திய வங்கி அறிவித்துள்ளது

  • May 8, 2025
  • 0 Comments

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2025 ஏப்ரல் மாத இறுதியில் 3 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பானது ஏப்ரல் மாத இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

உள்ளூர்

கொழும்பில் பரபரப்பான காலை வேளையில் இளைஞனொருவனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்

  • May 5, 2025
  • 0 Comments

கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் இன் காலை 6.35 மணியளவில் 19 வயது இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இளைஞர் சுடப்படுவதைக் காட்டும் மேலும் ஒரு சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிராய்ப்புகளுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் நகர சபையின் ஊழியராக இருந்ததுடன், கடற்கரை வீதிக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

  • May 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று (30-04) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம் சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், வீட்டிலிருந்து புறப்பட்டுச் […]

உள்ளூர்

அப்பாவியான பிள்ளையானை சிறையில் வைத்திருப்பது கொடுமை என கருணா தெரிவித்துள்ளார்

  • May 1, 2025
  • 0 Comments

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அது போன்றதொரு விடயம்தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழல்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் […]

உள்ளூர்

ஊடகவியலாளர்கள் தராகி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தலும் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டமும் இடம் பெற்றது

  • April 28, 2025
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான பொலிஸார் சீருடைகளுடன், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாருக்கு தண்ணி காட்டும் இஷாரா செவ்வந்தி

  • April 22, 2025
  • 0 Comments

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என […]