இலங்கையில் வேருன்றும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் – ஞானசார தேரர்
உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு உண்மையான நீதியை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும்,இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள் […]