முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸ பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ஷ 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் – செஹான் சேமசிங்க

  • February 17, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடாக அமைய கூடாது. மாறாக பொருளாதார மேம்பாட்டுக்கான பாதீடாக அமைய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் என முன்னாள் நிதி ,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,ன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

  • February 11, 2025
  • 0 Comments

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் மாடிக்கட்டடத்தில் […]

முக்கிய செய்திகள்

சட்டமா அதிபரை பதவி விலக்குவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றதென்கிறார் – தயாசிறி

  • February 9, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நாடகமொன்றை அரங்கேற்றி சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகித்து அவரை பதவி விலகச் செய்வதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். சட்டத்துறையில் அரசியல் தலையீடுகளை செலுத்தாமல் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அந்த […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம்

  • February 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் […]

முக்கிய செய்திகள்

பிள்ளையான் மீதான ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – கோட்டாபய

  • February 6, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலளித்துள்ள கோட்டபய ராஜபக்ச சிஐடி அதிகாரிகள் சமர்ப்பித்த ஆதாரங்கள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவுசெய்து வாசியுங்கள் என பதிலளித்துள்ளார். அந்த அறிக்கையில் இருக்கும் விடயங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க வீசா தொர்பில் அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏகுளு கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் […]

முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது

  • February 4, 2025
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று  பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் […]

முக்கிய செய்திகள்

1 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் அம்பாறையில் இளைஞன் கைது

  • February 4, 2025
  • 0 Comments

நேற்று இரவு (3-02-2025) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார். குறித்த பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் […]

முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

  • February 1, 2025
  • 0 Comments

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), […]