முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • February 1, 2025
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

ரோகிங்யா அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கமுடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • February 1, 2025
  • 0 Comments

மனித சமூகம் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பின் […]

உலகம்

ஸ்வீடனில் குரானை எரித்தவர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல இஸ்லாமிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன. ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர் முஸ்லிம்களின் புனித நூலை எரித்தார். இந்தச் செயலைத் தொடர்ந்து ஒரு இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • January 30, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைகழக விரிவுரிரையாளர்களை பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை

  • January 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அது கிடைத்த பின் கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைகளை முடிவுக்கு கொண்டவரும் எனவும் ஆகவே அதுவரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவுக்காக பிரார்த்தனை செய்யும் – நாமல் ராஜபக்ஸ

  • January 28, 2025
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார். மாவை விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிராத்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் […]

முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

  • January 27, 2025
  • 0 Comments

தமிழரசு கட்சியின் முடிவுக்காக, இன்று திங்கட்கிழமை (27) நடைபெற விருந்த தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட இருந்தது. இந்நிலையில் தமிழரசு கட்சி தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவித்தது. அதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோர், தமிழரசு […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வேறு மாவட்டத்திலிருந்து வருகின்றவர்கள் வர்த்தகம் செய்யக்கூடாதென ஆர்ப்பாட்டம்

  • January 23, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பொறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ;கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் வெளிமாவட்ட வர்த்தகர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் எனவே இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரி இந்த கிளிநொச்சி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்மை குறிப்பிடத்தக்கது இதனையடுத்து, வர்த்தக சங்கத்தினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். ஆர்ப்பாட்டகரர்களுக்கு பதிலளித்த மாவட்ட […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

  • January 21, 2025
  • 0 Comments

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று (20) மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர். தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை நாட்டின் […]

முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்டு பிடித்த விசர்(ய) டாக்குத்தர் அர்ச்சுனா

  • January 21, 2025
  • 0 Comments

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முரண்பட்டதாக தெரியவருகின்றது அர்ச்சுனா இன்று (21) பாராளுமன்ற அமர்வுக்காக கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிறகும் வகையில் வாகனம் ஓட்டியதாகவும் அவரது வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியதையடுத்தே இந்த முரண்பாடு எழுந்துள்ளது இதன்போது, ஆவணங்களை வழங்க மறுத்து, […]