பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முற்பகல் முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து சென்ற குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினரினால் நேற்று இரவு வரை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் […]